நெசவாளர்களுக்கு மத்திய அரசின் “பேச்சான்” அடையாள அட்டைகள் வழங்கல்
கோவை மாவட்டம் சூலூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், 300-க்கும் அதிகமான கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் “பேச்சான்” அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
சூலூரை அடுத்த வாகராயம்பாளையம் பகுதியில் அமைந்த தனியார் திருமண மண்டபத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சேலம் கைத்தறி நெசவாளர் சேவை மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
விழாவின் போது, அரசு அங்கீகாரத்தை உறுதி செய்யும் வகையில் 300-க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு பேச்சான் அடையாள அட்டைகள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.