சிறுமியின் அன்புக்கு நெகிழ்ந்து நன்றி கூறி உறுதி அளித்த பிரதமர் மோடி
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடியின் தாயின் உருவப்படத்தை வரைந்து கொண்டு வந்த சிறுமியிடம் அவர் நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த நிகழ்வு, சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ.வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அந்தச் சமயத்தில், கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஒரு சிறுமி, தன்னிடம் இருந்த பிரதமரின் தாயின் உருவப்படத்தை கைகளில் உயர்த்தி காட்டியபடி இருந்தார்.
இதைக் கவனித்த பிரதமர் மோடி, அந்த சிறுமியின் அன்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக தெரிவித்தார். மேலும், அந்த ஓவியத்தின் பின்னால் பெயரும் முகவரியும் எழுதிக் கொடுத்தால், தனிப்பட்ட முறையில் பாராட்டு மற்றும் ஆசீர்வாதம் நிறைந்த கடிதம் ஒன்றை அவளுக்கு அனுப்பி வைப்பதாக நெகிழ்ச்சியுடன் உறுதியளித்தார்.