2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆரம்ப சிக்னல்? – பிரவின் சக்ரவர்த்தி பதிவால் காங்கிரஸ்–திமுக கூட்டணியில் புதிய சர்ச்சை
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விசில் ஏற்கனவே ஊதப்பட்டுவிட்டது என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவின் சக்ரவர்த்தி வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு, அரசியல் வட்டாரங்களில் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாகவே, காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை வரவேற்கும் வகையில் பிரவின் சக்ரவர்த்தி வெளியிட்ட பதிவு, திமுக–காங்கிரஸ் கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இதனால், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியலில் புதிய திருப்பம் ஏற்படுமா? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.