பெருந்துறையில் 11ஆம் வகுப்பு மாணவர் மரணம் – உடலை பெற்றுக்கொள்ள மறுத்த உறவினர்கள் கைது

Date:

பெருந்துறையில் 11ஆம் வகுப்பு மாணவர் மரணம் – உடலை பெற்றுக்கொள்ள மறுத்த உறவினர்கள் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், தூக்கிட்டு உயிரிழந்த 11ஆம் வகுப்பு மாணவரின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்ய முயன்ற அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் சஞ்சீவ் என்ற மாணவர் 11ஆம் வகுப்பில் கல்வி பயின்று வந்தார். இந்த நிலையில், பள்ளி விடுதி அறையில் அவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த சஞ்சீவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடலை பெற்றுக்கொள்ள மறுத்தனர். மேலும், அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, காவல்துறையினர் போராட்டத்திற்கு முயன்றவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய சூரியன் – அண்ணாமலை கருத்து

நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய சூரியன் – அண்ணாமலை கருத்து நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய...

பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெற்றோர்களின் பாதங்களைத் துதி செய்து ஆசி பெற்றனர்

பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெற்றோர்களின் பாதங்களைத் துதி செய்து ஆசி...

“சர்வதேச ரவுடி” போக்கில் டிரம்ப் – உலகம் முழுவதும் அதிகரிக்கும் விமர்சனங்கள்

“சர்வதேச ரவுடி” போக்கில் டிரம்ப் – உலகம் முழுவதும் அதிகரிக்கும் விமர்சனங்கள் பகிரங்க...

பாதுகாப்பு ஏற்றுமதியில் இந்தியாவுக்கு புதிய சாதனை – ஆர்மேனியாவுக்கு அனுப்பப்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பு

பாதுகாப்பு ஏற்றுமதியில் இந்தியாவுக்கு புதிய சாதனை – ஆர்மேனியாவுக்கு அனுப்பப்பட்ட பினாகா...