விதிமுறைகளை மீறிய தனியார் ஆம்னி பேருந்து – பயணிகள் பாதிப்பு
நெல்லையில் இருந்து சென்னை செல்ல திட்டமிடப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாக புறப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
ராஜலட்சுமி டிராவல்ஸ் என்ற பெயரில் இயங்கும் அந்த பேருந்து, பயணிகளை தாமதமாக ஏற்றியதுடன், அதன் அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த சரக்குப் பொருட்களை பேருந்தின் மேற்கூரையில் ஏற்றியதாக கூறப்படுகிறது.
வரம்பை மீறிய அளவில் கனமான பொருட்கள் ஏற்றப்பட்டிருந்ததை பார்த்து அச்சமடைந்த பயணிகள், பாதுகாப்பு காரணமாக பேருந்தில் இருந்து இறங்கியதோடு, பேருந்து ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தாமதம் காரணமாக, குழந்தைகளுடன் பயணம் செய்திருந்தவர்கள் உட்பட பலர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.