அடல் பென்ஷன் திட்டம் 2031 வரை நீட்டிப்பு – மத்திய அரசு அனுமதி
அடல் பென்ஷன் யோஜனையை 2031-ம் ஆண்டு வரை செயல்படுத்த மத்திய அமைச்சரவை சம்மதித்துள்ளது.
2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், சந்தா செலுத்தும் நபர்களுக்கு, 60 வயதுக்குப் பிறகு மாதம் குறைந்தபட்சம் ₹1,000 முதல் அதிகபட்சம் ₹5,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஜனவரி 19ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 8.66 கோடிக்குமேல் நபர்கள் இதற்குள் இணைந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, திட்டத்தை 2031 ஆம் நிதியாண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.