இந்தியாவை தனியாக குறிவைக்கும் அமெரிக்க நடவடிக்கை அநியாயம் – ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

Date:

இந்தியாவை தனியாக குறிவைக்கும் அமெரிக்க நடவடிக்கை அநியாயம் – ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

இந்தியாவை மட்டும் நோக்கி அமெரிக்கா பொருளாதார தடைகள் விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், உக்ரைன் – ரஷ்யா மோதல் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மற்றும் நிலைப்பாடு ஏற்கனவே பலமுறை உலக நாடுகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் நோக்கில், இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அழுத்தம் கொடுப்பது நியாயமற்ற செயல் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவின் உரிமை என்றும், அதில் தலையீடு செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் ஜெய்சங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

2026 தேர்தல் களம்: அதிமுக – பாஜக கூட்டணியில் இணைகிறதா தவெக? அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்புத் தகவல்கள்!

2026 தமிழக அரசியல் அதிரடி: NDA கூட்டணியில் இணைகிறதா தவெக? பின்னணியும்...

ஈரான் – அமெரிக்கா போர்: ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி ரஷ்யா மறைமுக உதவி?

ஈரான் - அமெரிக்கா போர்: ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி ரஷ்யா...

நாங்குநேரி இரட்டைக் கொலை: ஆறுதல் கூறச் சென்ற செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

நாங்குநேரி இரட்டைக் கொலை: ஆறுதல் கூறச் சென்ற செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்ட பொதுமக்கள்! திருநெல்வேலி...

“அதிகார மமதையில் திமுகவினர்”: கர்ப்பிணி பெண் பலியான விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

"அதிகார மமதையில் திமுகவினர்": கர்ப்பிணி பெண் பலியான விவகாரத்தில் நயினார் நாகேந்திரன்...