ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பிய சிறுவன் மீது காங்கிரஸ் நிர்வாகிகள் அச்சுறுத்தல் – சர்ச்சை வெடிப்பு

Date:

ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பிய சிறுவன் மீது காங்கிரஸ் நிர்வாகிகள் அச்சுறுத்தல் – சர்ச்சை வெடிப்பு

கேரளா பயணத்தின் போது ராகுல் காந்தியிடம் இந்தி மொழியில் கேள்வி கேட்ட ஒரு சிறுவனை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அச்சுறுத்தி, அவனிடமிருந்த மைக்கை பறித்த சம்பவம் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் உள்நிலை விவகாரங்களை முன்னிட்டு கேரளாவிற்கு சென்றிருந்த காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தொண்டர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.

அந்த நிகழ்வின் போது, ஒரு சிறுவன் ராகுல் காந்தியிடம், “மேற்கு வங்க மாநிலம் ஏன் இவ்வளவு பின்னடைவை சந்தித்து வருகிறது?” என இந்தியில் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு ராகுல் காந்தி உடனடியாக பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலையில், அங்கு இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிறுவனை கடுமையாக கண்டித்ததுடன், அவன் பேசிக் கொண்டிருந்த மைக்கையும் பறித்தனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் நேரில் நடைபெறக் கண்ட ராகுல் காந்தி, எந்த தலையீடும் செய்யாமல் அமைதியாக நின்றிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவரது தலைமைத் திறன் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு

பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு பிஹார் மாநில அரசில் சாலை...

இசை மேதை இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது அறிவிப்பு

இசை மேதை இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது அறிவிப்பு புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, ‘பத்மபாணி’...

பாஜக தேசிய தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் நிதின் நபின்

பாஜக தேசிய தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் நிதின் நபின் பாரதிய ஜனதா கட்சியின்...

CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” – விழிப்புணர்வு பாடல் வெளியீடு

“CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” – விழிப்புணர்வு...