“CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” – விழிப்புணர்வு பாடல் வெளியீடு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை ஒட்டிய பகுதியில், தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” தொடர்பான விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த CISF தென்மண்டல தலைமை ஆய்வாளர் (IG) சரவணன், வருகிற 28ஆம் தேதி டெல்லியில் அமைந்துள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் இருந்து, இந்த கடலோர சைக்கிள் பயணம் காணொலி வழியாக தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்தப் பயணத்தில், கடற்கரைப் பகுதிகளைக் கடந்து மொத்தம் 6,553 கிலோமீட்டர் தூரம் 130 வீரர்கள் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், 25 நாட்கள் நீடிக்கும் இந்த முயற்சியில் 11 வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.
மேலும், 52 கடலோர கிராமங்கள் வழியாக பயணம் செய்யும் போது, அந்தந்த பகுதிகளில் தங்கி பொதுமக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை வீரர்கள் கேட்டறிவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.