என்டிஏ கூட்டணியுடன் தேர்தலில் களமிறங்க விருப்பம் – பாரிவேந்தர் அறிவிப்பு
இந்திய ஜனநாயக கட்சியின் மாநாடு வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக இணைந்து போட்டியிட தமது கட்சி ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கடலூரில் நடைபெறவுள்ள மாநாடு கட்சியின் எதிர்கால அரசியல் பயணத்தில் முக்கியமானதாக அமையும் எனக் கூறிய அவர், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றிற்கு தனக்கு அழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.