குன்னூரில் பரபரப்பு: வீட்டில் இருந்த செல்ல நாயை தூக்கிச் சென்ற சிறுத்தை – சிசிடிவி காட்சிகள் வெளியீடு
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில், வீட்டில் வளர்க்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை தாக்கி எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், தற்போது குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேல்தளத்தில் இருந்த செல்ல நாயை, திடீரென புகுந்த சிறுத்தை கவ்வி தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த முழு சம்பவமும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, ஊருக்குள் சுற்றித் திரியும் சிறுத்தையை உடனடியாக கூண்டு அமைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறையினரிடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.