வங்கதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரான இந்து இளைஞர் மீது கார் மோதல் – கொடூரக் கொலை
வங்கதேசத்தில் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வந்த இந்து இளைஞர் ஒருவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக வங்கதேசத்தில் இந்து சமூகத்தை குறிவைத்து நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ராஜ்பாரி மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காரில் வந்த சிலர் வாகனத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு, பணம் செலுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதனை தடுக்க முயன்ற ரிபன் சாஹா என்ற இந்து இளைஞரை அவர்கள் காரால் மோதியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ரிபன் சாஹா உயிரிழந்தார், மேலும் குற்றம் செய்தவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, வங்கதேசத்தில் இதுவரை உயிரிழந்த இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.