தாக்கரே அரசியல் காலகட்டத்திற்கு முற்றுப்புள்ளி – ஃபட்நாவிஸ் கருத்து
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான நிர்வாகத்திற்கு மும்பை மக்களிடையே வலுவான ஆதரவு உருவாகியுள்ளது என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து, பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஃபட்நாவிஸ் வெற்றியுரை நிகழ்த்தினார்.
அந்த உரையில், மும்பை அரசியலில் ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆதிக்கம் செலுத்திய காலம் தற்போது முடிவடைந்துவிட்டதாக அவர் கூறினார்.
வளர்ச்சியை மையமாகக் கொண்ட அரசியலுக்கே மும்பை மக்கள் ஆதரவு வழங்குவதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஃபட்நாவிஸ் சுட்டிக்காட்டினார்.
மேலும், மாநகராட்சி தேர்தலில் பெற்ற இந்த வெற்றி, பாஜகவின் பொறுப்பையும் கடமையையும் இன்னும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.