சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் – அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள்!
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சி அமைந்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
மேலும், தற்போது பெண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து சேவை, ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வீடு இல்லாமல் வசித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு, அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை முழுமையாக தயாரிக்கப்பட்ட பிறகு, இதைவிட மேலும் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.