அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடக்கம் – வீரர்கள் உறுதிமொழி ஏற்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வீரர்களின் உறுதிமொழியுடன் இன்று தொடங்கியது.
அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில், முனியாண்டி கோயில் காளை மற்றும் வலசை அரியமலை கோயில் காளைகள் மேளதாளங்கள் முழங்க சிறப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டன.
சற்று நேரத்தில், கோயில் காளைகள் வாடிவாசல் முன் கொண்டு வரப்பட்டு பாரம்பரிய முறையில் மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் அவிழ்த்து விடப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உறுதிமொழி ஏற்கவைக்க உள்ளார். அதன் பின்னர், அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.