தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும் உலகெங்கும் பரவட்டும் – அண்ணாமலை
அறம், பொருள், இன்பம் என மனித வாழ்க்கைக்கான நெறிகளைப் போதிக்கும் திருக்குறளை உலகுக்கு வழங்கிய திருவள்ளுவரின் பிறந்த நாளான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காலங்களைத் தாண்டியும் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டும் ஞான நூலாக விளங்கும் திருக்குறள், அனைவரின் வாழ்விலும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும் உலகெங்கும் பரவி, தமிழ்ச் சிந்தனையின் மேன்மையை உலக நாடுகள் அறியும் வகையில் வளர்ச்சி பெற வேண்டும் என்றும் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.