மயிலாடுதுறை அருகே பரதநாட்டியத்துடன் யோகா – சிறுமியின் அசத்தல் நிகழ்ச்சி
மயிலாடுதுறை அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில், பரதநாட்டியம் ஆடும் போதே யோகா ஆசனங்களை செய்து அசத்திய சிறுமிக்கு பார்வையாளர்களிடையே பெரும் பாராட்டுகள் குவிந்தன.
பகுதியில், தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவில் பரதநாட்டியம், கிராமிய நாட்டுப்புறக் கலைகளான பச்சைக்காளி, பவளக்காளி நடனம், நையாண்டி மேளம், சிலம்பம், பறை இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதில், பரதநாட்டியம் ஆடும் போதே யோகா கலையின் பல்வேறு ஆசனங்களை செய்து காட்டிய சிறுமியின் திறமை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. அவரது நிகழ்ச்சிக்கு அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சி முடிவில், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.