தமிழர் பண்பாட்டில் உயிரினங்களுக்கு வழங்கும் மதிப்பை எடுத்துரைக்கும் நாள் – மாட்டுப் பொங்கல்
தமிழர் வாழ்க்கை முறையில் ஜீவராசிகளுக்கு அளிக்கப்படும் மரியாதையையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் சிறப்பு நாளாக மாட்டுப் பொங்கல் திகழ்கிறது. விவசாயத்திற்கு துணைநின்று, உழவர்களின் தினசரி வாழ்வின் ஒரு அங்கமாக விளங்கும் மாடுகள் உள்ளிட்ட பிற உயிரினங்களுக்கு நன்றி கூறும் நோக்கில் இந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இன்று தங்கள் மாடுகளுடனும் மற்ற விலங்குகளுடனும் மாட்டுப் பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைத்து விவசாயப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த மாட்டுப் பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என, மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.