இந்த வழக்கில் தலையிட வேண்டாம் – நீதிமன்றம் கருத்து
இந்த வழக்கில் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாமல், அவசரமாக விசாரித்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இவ்வாறு விரைவாக வழக்குகளை முடித்து வைக்கும் நீதிபதிகளை பாராட்ட வேண்டியதே தவிர, அதில் தவறு எதுவும் இல்லை என்றும், மனுவை சீக்கிரமாக விசாரித்து தீர்ப்பளிப்பதில் குற்றம் காண முடியாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும், சம்பந்தப்பட்ட விவகாரத்தின் உட்பொருளில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
இதனால், மனுதாரர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் அமர்வு முன்பு அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதனுடன், வரும் 20ஆம் தேதி இந்த வழக்கை டிவிசன் அமர்வு விசாரித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.