குப்பை சேகரிப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள் – திருவண்ணாமலையில் சர்ச்சை
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா நிறைவடைந்த பின்னர், தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பொங்கல் விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு, 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.
விழா நிகழ்ச்சி முடிந்ததையடுத்து, அங்கு பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மீண்டும் குப்பை அள்ளும் வாகனத்திலேயே அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் செயல் மனிதாபிமானத்திற்கு எதிரானது என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.