தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
தமிழ் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் பொங்கல் கொண்டாட்டம், இயற்கையுடன் உள்ள நமது உறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், நாட்டின் செழுமையான பாரம்பரியத்தை மதிக்கும் விதத்திலும் அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிறைந்த மனப்பான்மையுடன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற்றப் பாதையில் பயணிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.