தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் என் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சூரியன், மழை, மண் ஆகிய இயற்கை சக்திகளுக்கு நன்றி செலுத்தி, பூமியுடன் இணைந்து உழைத்து, நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விவசாயிகளின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றும் விழாவாக பொங்கல் திகழ்கிறது. இது பாரதத்தின் பண்பாட்டு அடையாளங்களில் முக்கியமான ஒன்றாகும்.
இந்தப் பொங்கல் திருநாள், தமிழகத்திற்கு செழிப்பு, அமைதி மற்றும் நலன் வழங்க வேண்டும் என்றும், தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, உடல் நலம் மற்றும் மன அமைதி நிறைவாக இருக்க வேண்டும் என்றும் மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.