“பொங்கல் பொங்கட்டும்… வாழ்க்கை வளம்பெறட்டும்!” – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து
பொங்கல் மலரட்டும்… வாழ்க்கை செழித்தோங்கட்டும்!
கல் தோன்றிய காலத்திற்கும் முன்பே, வாளோடு தோன்றி வரலாற்றை உருவாக்கிய பழம்பெரும் தமிழ் குடியின் பெருமைமிக்க திருநாளான பொங்கல் பண்டிகை, தேன் போல இனிமை தரவும், செங்கரும்பு போல் திகட்டாத சுவையுடன் நம் வாழ்வில் மகிழ்ச்சியைப் பெருக்கவும் இறைவனை மனமார வேண்டுகிறேன்.
தை மாதம் பிறந்துள்ள இந்த நன்னாளில், விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான அரசு அமைந்து, தமிழக மக்கள் அனைவருக்கும் நல்ல காலம் மலர வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன். இயற்கையை வணங்கி, உழவர்களை போற்றி, தமிழர்களின் இந்த உயரிய திருநாளான தை திருநாளை, உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் அனைவருடனும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.