பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த அரசு நடவடிக்கை அவசியம் – ஜல்லிக்கட்டு பேரவை
தமிழக பாரம்பரிய பகுதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை மீண்டும் நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் சிறப்புரை வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகரன், கடந்த காலங்களில் மதுரை மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றதாகவும், தற்போது அவற்றில் வெறும் 6 இடங்களில் மட்டுமே தொடர்கின்றன எனவும் தெரிவித்தார்.