கொடைக்கானலில் சாரல் மழை – பொதுமக்கள் வாழ்வியல் பாதிப்பு
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
அண்ணா சாலை, மூஞ்சிக்கல், செண்பகனூர் நகர பகுதிகள் மற்றும் பூம்பாறை, மன்னவனூர், குண்டுபட்டி போன்ற மேல்மலை கிராமங்களிலும் மழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதான சாலைகளில் கடும் பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாமல், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.