சமத்துவ பொங்கல் பெயரில் இந்துக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி – வானதி சீனிவாசன்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்துக்களை ஏமாற்றும் நோக்கில் ‘சமத்துவ பொங்கல்’ என்ற பெயரில் விழா நடத்தி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
கோவை வடவள்ளியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய பாரம்பரிய பண்டிகைகள் நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்துடன் ஆழமாக இணைந்தவை என தெரிவித்தார்.
‘சமத்துவ பொங்கல்’ என்ற பெயரில் எந்தவொரு மரபும் இல்லை என்றும், இல்லாத ஒரு கருத்தை உருவாக்கி முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கலை கொண்டாடுவது இந்து சமூகத்தை தவறாக வழிநடத்தும் செயலாகும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர், இந்து திருநாள்களுக்கு மட்டும் அக்கறை காட்டுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு பிறகு அரசியல் சூழல் மேலும் தீவிரமடைந்து, தேர்தல் பணிகள் வேகமெடுக்கும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.