சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் உற்சாகமாக நடைபெற்ற மோடி பொங்கல் விழா
தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகளும் பொதுமக்களும் இணைந்து மோடி பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில், சென்னை தியாகராய நகரில் பாரம்பரிய நடைமுறைகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், வினோத் பி.செல்வம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவின் ஒரு பகுதியாக அழகிய கோலப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தென் சென்னை மாவட்ட அமைப்புசாரா பிரிவின் துணைத் தலைவர் வெங்கடேஷ் ஏற்பாடு செய்திருந்த இந்த மோடி பொங்கல் விழாவில், ஏராளமான பொதுமக்களும் பெண்களும் கலந்துகொண்டு விழாவிற்கு உயிரூட்டினர்.