மோடி பொங்கல் விழா பேனர்கள் அகற்றம் – நெல்லையில் பரபரப்பு
நெல்லை மாவட்டத்தில் நடைபெறவிருந்த “மோடி பொங்கல்” விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் நள்ளிரவில் அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதாபுரம் அருகே உள்ள கண்ணன்குளம் பகுதியில் இன்று மோடி பொங்கல் விழா கோலாகலமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலை முதலே வேகமாக நடைபெற்று வந்தன. விழாவை முன்னிட்டு, அப்பகுதி முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளின் புகைப்படங்களுடன் கூடிய பேனர்கள் நிறுவப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அந்தப் பேனர்களை அகற்றி எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பாஜக நிர்வாகி அசோக், போலீசாரைத் தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி, வைரலாகி வருகிறது.