மஞ்சள் அறுவடை பணிகள் தீவிரம்
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் மஞ்சள் பயிர்களை அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
பாலமேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களில், விவசாயிகள் அறுவடை செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பெற்றுள்ள மஞ்சள் கிழங்குகள், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மட்டுமன்றி, அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மஞ்சளின் விளைச்சல் அதிகரித்துள்ளதாக கூறும் விவசாயிகள், அதனால் இரட்டிப்பு வருமானம் கிடைத்ததாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.