அதிமுக வேட்பாளர் விருப்ப மனுதாரர்களுடன் 2-வது நாளாக இபிஎஸ் ஆலோசனை
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு சமர்ப்பித்தவர்களுடன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது நாளாக நேர்காணல் நடத்தினார்.
அதிமுக வேட்பாளராக போட்டியிட 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ள நிலையில், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொகுதி வாரியாக நேர்காணல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களை இன்று இரண்டாவது நாளாக இபிஎஸ் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது, கட்சிக்காக அவர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், இறுதியில் யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், அனைவரும் ஒருங்கிணைந்து அவர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.