“தேசிய இளையோர் திருவிழா” – டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்
“தேசிய இளையோர் திருவிழா” நிகழ்வில், டெல்லி சென்ற இளைஞர்களுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார்.
அவர் குறிப்பிட்டதாவது, பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், 2047-ஆம் ஆண்டுக்குள் முன்னேற்றம் அடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப மத்திய அரசு திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறது. உலகில் மிகப்பெரிய இளைஞர் சக்தி கொண்ட நமது தேசத்தின் வளர்ச்சையை முன்னெடுப்பது இளைய தலைமுறையரின் கையிலேயே உள்ளது. இதையே முன்னிட்டு, “தேசிய இளையோர் திருவிழா” டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வளர்ச்சியடைந்த பாரதத்தில் இளைய தலைவர்கள்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் இருந்து டெல்லி வந்த இளைஞர்களை தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். மேலும், தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளை அனுபவித்து, இரவு உணவு விருந்தில் அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக அவர் தெரிவித்தார்.