அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றதாக நயினார் நாகேந்திரன் பின்னர் தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அவர் சென்னை அல்லது மதுரை ஆகிய இடங்களில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாகவும் கூறினார்.
இந்த சந்திப்பில் நயினார் நாகேந்திரனுடன், பாஜக மாநில துணைத் தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், சக்கரவர்த்தி, கே.பி. ராமலிங்கம் மற்றும் அணிகள்-அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் கே.டி. ராகவன் ஆகியோரும் உடனிருந்தனர்.