அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை – எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னிடம் விசாரித்ததாக கூறினார்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை அதிமுகவே முன்னிலைப் படுத்தி வழிநடத்தும் என்றும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி, கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல அரசியல் கட்சிகள் சேர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவை இணைத்துக் கொள்ள எந்தச் சாத்தியமும் இல்லை என்றும், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் உறுதி செய்யப்பட்ட பின்னரே தொகுதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் இபிஎஸ் கூறினார்.