மதுரவாயல் பைபாஸில் பைக் வீலிங் – ஆபத்தான ரீல்ஸ் வீடியோ வைரல்
சென்னை மதுரவாயல் பகுதியில் பைக் ஓட்டியபடி ஆபத்தான வீலிங் சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகன பந்தயம் மற்றும் அபாயகரமான சாகசங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது. இந்த சூழலில், தொடர்ந்து இத்தகைய ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு வரும் இளைஞரை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
முன்சக்கரத்தை தூக்கி பைக்கை ஓட்டும் வீலிங் சாகசத்தை செய்து அதனை ரீல்ஸ் வடிவில் வெளியிடும் அந்த இளைஞரின் செயல்கள், அந்த வழியாக பயணிக்கும் பிற வாகன ஓட்டுநர்களுக்கு கடுமையான அபாயத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபோன்ற சாலை பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.