திருப்பரங்குன்றம் விவகாரம் – அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி
திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்து, திமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஒருவர் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் செயல்பட்டு வந்தவர். கட்சியின் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையால், பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்துள்ளார். திமுக மீது கொண்ட தீவிர பற்றை வெளிப்படுத்தும் வகையில், தனது இடது கையில் உதயசூரியன் சின்னத்தை பச்சை குத்தி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசின் அணுகுமுறை தமக்கு ஏமாற்றத்தை அளித்ததாக தெரிவித்த ராஜேந்திரன், பாஜகவில் இணைவதாக அறிவித்தார்.
மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்து சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.