முதலமைச்சரை காவடி தூக்க சொல்லவில்லை; கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்கச் சொல்கிறேன் – எல்.முருகன்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை வணங்கி, “நான் உங்களுடன் துணையாக நிற்கிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தால், அதனை மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வார்கள் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரை காவடி எடுத்து நடக்கச் சொல்லவில்லை என்றும், கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசனம் செய்யுமாறு மட்டுமே வலியுறுத்துகிறேன் என்றும் விளக்கினார்.
எப்போது சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் திமுக தோல்வியடைந்து ஆட்சியை இழப்பது உறுதி என்றும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றும் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.