2026 ஆண்டு ஆட்சிப் மாற்றத்திற்கு வழிவகுக்கும் காலமாக இருக்கும்
திமுக தலைமையிலான அரசை நீக்க பொதுமக்கள் மனதளவில் தயார் நிலையில் உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் ஆண்டாக அமையும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் ஊடகத்தினரை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை மிகக் கவலைக்கிடமானதாக உள்ளதாக கூறி, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மாநிலம் முழுவதும் பாலியல் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், திருவண்ணாமலை பகுதியில் ஒரே வாரத்திற்குள் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.