வைகோ முன்னெடுக்கும் நடைபயண தொடக்க நிகழ்ச்சி – காங்கிரஸ் கட்சி பங்கேற்பில்லை
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் “சமத்துவ நடைபயணம்” தொடக்க நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சியினர் தவிர்த்தது, அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் உழவர் சந்தை வளாகத்தில், சமத்துவ நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நடைபயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்த பயணம் வரும் 12ஆம் தேதி மதுரியில் நிறைவடைய உள்ளது.
இந்த தொடக்க நிகழ்ச்சியில், மதிமுக தலைமை அழைப்பை ஏற்று விசிக, மநீம உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதில் விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆனால், நடைபயண தொடக்க விழா அழைப்பிதழின் முகப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் புகைப்படம் இடம்பெற்றிருந்ததை காரணமாகக் கொண்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எந்தத் தலைவரும் அல்லது நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.