தூய்மைப் பணியாளர்கள் மனிதர்களே இல்லையா? திராவிட மாடல் ஆட்சிக்கு இது கூட நினைவிலில்லையா?
“சமத்துவம் மலர வேண்டும்” என்று சமூக ஊடகங்களில் உரையாடும் தமிழக அரசு, நடைமுறையில் சமூகநீதியை புறக்கணித்து, அடக்குமுறை மனப்பான்மையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் புத்தாண்டை பட்டாசுகள் மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நேரத்தில், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இருளில் அடைத்துவைத்து, பின்னர் நள்ளிரவில் தெரியாத இடத்தில் இறக்கிவிட்டு மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டது கடும் கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
பணிநிரந்தரம் வழங்குவதாக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் மறக்கப்பட்டிருந்தால் கூட, தூய்மைப் பணியாளர்களும் மனிதர்களே என்பதே இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு மறந்துவிட்டதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். புத்தாண்டு நாளில் திக்குத் தெரியாமல் தூய்மைப் பணியாளர்களை தவிக்கவிட்ட இந்தச் செயலின் விளைவு, அறிவாலய ஆட்சியை திக்குத் தெரியாமல் மக்கள் விரட்டும் நிலையை உருவாக்கும். தூய்மைப் பணியாளர்களின் கண்ணீர் தான் திமுக அரசின் வீழ்ச்சிக்குக் காரணமாகும் என நயினார் நாகேந்திரன் கடுமையாக எச்சரித்துள்ளார்.