புத்தாண்டு நலன், செழிப்பு, முன்னேற்றம் தரட்டும் – பிரதமர் மோடியின் வாழ்த்து!
2026ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்றும், அனைத்து மக்களின் நலனுக்காக புத்தாண்டு இனியதாக அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தாண்டு நல்ல உடல்நலத்தையும், பொருளாதார வளத்தையும் வழங்கட்டும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும். உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேற வேண்டும். நம் சமூகத்தில் அமைதி, சந்தோஷம் மற்றும் ஒற்றுமை நிலவ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.