ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் குவிப்பு : 1.71 லட்சத்துக்கும் மேல் இன்னும் நிலுவை
புதிய ரேஷன் கார்டு பெற சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில், 1 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிகமானவை இன்னும் செயல்படுத்தப்படாமல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை மூலம், தகுதி உள்ள குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்களில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதம் 27ஆம் தேதி நிலவரப்படி, புதிய ரேஷன் கார்டுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,70,774 விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதில், 52,710 விண்ணப்பங்களுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்திருந்தும், இதுவரை ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து முடித்து, ரேஷன் கார்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.