தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உற்சாகமான வரவேற்பு!
நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்தடைந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பூங்கொத்து வழங்கி ஆளுநரை வரவேற்றார்.
நான்கு நாட்கள் கொண்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உதகை சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவையை அடைந்த அவர், அங்கிருந்து கோத்தகிரி சாலை வழியாக பயணித்து, அரசு தாவரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார்.
அங்கு, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, பூங்கொத்து வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவியை அன்புடன் வரவேற்றார்.
இந்த நிகழ்வின்போது நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷாவும் உடனிருந்தார். உதகையில் சில நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ள ஆளுநர், வரும் 3ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்பவுள்ளார்.
ஆளுநரின் வருகையை முன்னிட்டு, உதகை முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.