திமுக நிர்வாகத்தில் மக்கள் பாதுகாப்பு முற்றிலும் சிதைந்துள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு நடந்த கொடூர தாக்குதலின் அதிர்ச்சி இன்னும் குறையாத நிலையில், அதே பகுதியில் மற்றொரு நபருக்கும் தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தணியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜமால் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்ட அண்ணாமலை, கடந்த சில ஆண்டுகளாகவே திமுக ஆட்சியில் இத்தகைய வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக விமர்சித்த அவர், திமுக தனது நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொள்ள, இன்னும் எத்தனை சூரஜ்களும், ஜமால்களும் வன்முறைக்கு உள்ளாக வேண்டுமெனக் கேள்வி எழுப்பியுள்ளார்.