திருத்தணி ரயில் நிலையத்தில் நின்ற நபருக்கு கொடூர தாக்குதல் – வெளியான காணொளி பரபரப்பு
திருத்தணி ரயில் நிலைய வளாகத்தில் அமைதியாக நின்றிருந்த ஒருவரை இரண்டு இளைஞர்கள் திடீரென தாக்கும் காட்சி வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நேரு நகரைப் பகுதியைச் சேர்ந்த ஜமால் பாய் என்பவர், பழைய பட்டுப்புடவைகள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
ரயில் நிலையத்தில் இருந்தபோது, ஜமால் பாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், இரண்டு இளைஞர்கள் அவரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி பகுதியில் சமீபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, தொடர்ந்து நிகழும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.