ஆங்கில புத்தாண்டு வரவேற்பு – கேக் விற்பனை உச்சம்!
ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் வகையில், பேக்கரிகளில் கேக் விற்பனை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
தருமபுரி நகரில் செயல்படும் ஒரு பேக்கரியில், பொதுமக்கள் பார்வையிடும் விதமாக நூற்றுக்கணக்கான கேக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பல விதமான வடிவமைப்புகள் மற்றும் கண்கவர் நிறங்களில் தயாரிக்கப்பட்ட இந்த கேக்குகள், அரை கிலோ தொடங்கி 6 கிலோ எடை வரை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், பிளாக் ஃபாரஸ்ட், வைட் ஃபாரஸ்ட், ஹனி கேக், ஐஸ் கிரீம் கேக், ஜெர்மன் பிளாக் ஃபாரஸ்ட், சாக்லேட் டிரஃபிள், சாக்லேட் சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் உருவாக்கப்பட்ட கேக்குகளை வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.