புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் – 7 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே, டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது முன் சென்ற டிப்பர் லாரியை முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பேர் கடுமையாக காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.