கொங்கு, சோழ மண்டலம் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் என்டிஏ வெற்றி – நயினார் நாகேந்திரன்
கொங்கு மண்டலம், சோழ மண்டலம் என்ற வரம்பின்றி, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் பொதுமக்களைச் சந்தித்து உரையாற்றிய அவர், முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்மொழியை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி வருவதாக விமர்சனம் செய்தார்.
மேலும், தனது மகனை முதல்வராக உருவாக்கும் நோக்கில், கூட்டணியை ஸ்டாலின் கடுமையாகக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
திமுக தலைமையிலான ஆட்சியின்மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தி நிலவுவதாக கூறிய நயினார் நாகேந்திரன், கனிம வளங்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு, அதற்குப் பதிலாக கழிவுப் பொருட்கள் தமிழகத்துக்குள் கொண்டு வரப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.