100 நாள் வேலைத் திட்டத்தில் பிற மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிக ஒதுக்கீடு
அதிமுகவும் பாஜகவும் தமிழக மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகின்றன என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற “தமிழகம் தலைநிமிர – தமிழனின் பயணம்” என்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று திமுக அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என விமர்சனம் செய்தார்.
மேலும், எந்தத் தேர்தல் வாக்குறுதியும் அளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி செயல்படுத்தி வருவதாக அண்ணாமலை கூறினார்.
பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களை விடவும், 100 நாள் வேலைத் திட்டத்திற்காக தமிழகத்திற்கே அதிக அளவிலான நிதி மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.