சென்னை: கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளி ஊழியர்கள் போராட்டம்
பணிநிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் இணைந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.
மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், 50க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு நிரந்தர அரசுப் பணியிடம் வழங்க வேண்டும், அரசாணை எண் 151 எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி அமல்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், தற்போது பயன்படுத்தப்படும் “தொகுப்பு ஊதிய பணியாளர்” என்ற சொல்லை நீக்கி, தங்களை முழுமையான நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.