மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி இல்லை என்பதே அவமானம் – அதிமுக மாணவர் அணி கடும் விமர்சனம்
கடற்கரையில் பேனா நிறுவும் திட்டங்களை முன்னெடுக்கும் திமுக அரசு, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க தேவையான நிதி இல்லை என்று கூறுவது மிகுந்த வெட்கத்துக்குரிய விஷயம் என அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அதிமுக மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கட்சி என்றும், திமுக பிரச்சினைகளை பேசிப் பேசிச் சென்று வாக்கு திரட்டும் அரசியல் கட்சியாக மட்டுமே செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, முன்னாள் மக்களவை உறுப்பினர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.